ADDED : ஜன 07, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மகள் டயானா, 24; பி.ஏ., பட்டதாரி. செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஊருக்கு வந்த டயானாவை கடந்த 5ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.