ADDED : பிப் 13, 2024 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: பொரசக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியைச் சேர்ந்தவர் பழனிவேல் மகள் விக்னேஸ்வரி, 19; கடந்த 9ம் தேதி மாலை 6:00 மணியளவில் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் சத்யா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.