ADDED : பிப் 23, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மகளைக் காணவில்லை என போலீசில், தந்தை புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம், கம்பம் அடுத்த வடக்குபட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் மனைவி ஷாலினி, 25; கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன் ஷாலினி கள்ளக்குறிச்சி ஜெ.ஜெ., நகரில் உள்ள தந்தை உலகமுத்து வீட்டிற்கு வந்துள்ளார்.
கடந்த 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ஷாலினி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் காணவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை உலகமுத்து அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.