ADDED : ஏப் 28, 2025 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே மகளைக் காணவில்லை என போலீசில், தந்தை புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மகள் திவ்வியபிரியா, 18; நர்சிங் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவரை கடந்த 26ம் தேதி மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சாமிதுரை அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.