தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மகள் மாயம் :தாய் புகார்

 மகள் மாயம் :தாய் புகார்

 மகள் மாயம் :தாய் புகார்


ADDED : ஏப் 15, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் துர்காதேவி,16; இவர், பள்ளி கால படிப்பு தொடராமல் வீட்டில் இருந்தார். கடந்த 12ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற துர்காதேவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் துர்காதேவியை கண்டுபிடித்து தரக்கோரி இவரது தாய் தனலட்சுமி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us