/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்; இரு வாலிபர் கைது
/
எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்; இரு வாலிபர் கைது
ADDED : பிப் 15, 2024 10:15 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் இரண்டு போலீசார் நேற்று முன்தினம் மாலை அரசு பயணியர் விடுதி மாளிகை அருகே ரோந்து சென்றனர். அப்போது கா.மாமனந்தல் ரோடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் முத்துகுமார்,23; வ.உ.சி., நகர் பெரியசாமி மகன் விஜயகுமார்,27; சித்தேரி தெரு சந்தோஷ் உட்பட 4 பேர் சாலையின் நடுவே பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். அவர்களை போலீசார் எச்சரித்தும் போகவில்லை. வாகனத்தின் ஆவணங்களின் கேட்டபோது தராமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசாரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து முத்துகுமார், விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சந்தோஷ் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.