ADDED : பிப் 19, 2025 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நபரின் உறவினர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உடலை பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி காவல் நிலைய செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 56; மனநலம் பாதிக்கப்பட்டவர். கள்ளக்குறிச்சி பகுதியில் சுற்றித் திரிந்தவர் உடல் நலக்குறைவால், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இறந்த சரவணனின் உறவினர்கள் அல்லது அவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தை, 94981 00536, 94981 55208 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உடலை பெற்றுக்கொள்ளலாம்.