/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரும் தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை முடிவு செய்யுங்கள்: பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு

ADDED : ஆக 15, 2025 11:23 PM

ரிஷிவந்தியம்; 'வரும் தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை முடிவு செய்யுங்கள்' என பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
பா.ம.க., சார்பில் உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணத்தின் போது ரிஷிவந்தியத்தில் அவர் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம் என்றாலே கள்ளச்சாரயம் என்ற அவப்பெயர் வந்துள்ளது. கடந்த ஆண்டு தி.மு.க., அரசால் 67 பேர் கொலை செய்யப்பட்டனர். இதை நீக்க வேண்டுமென்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும்.
ரிஷிவந்தியம் தொகுதி வானம் பார்த்த பூமி, இங்கு நீர்ப்பாசன திட்டம் எதுவும் கிடையாது. தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆறுகளில் 5 கி.மீ., துாரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட கோரிக்கை விடுத்திருந்தோம். யாரும் கண்டு கொள்ளவில்லை.
ஏனெனில் தடுப்பணை கட்டினால் மணல் கொள்ளை அடிக்க முடியாது. பா.ம.க., போராட்டத்தினால் உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிற்சாலை, வேலைவாய்ப்பு எதுவும் கிடையாது.
தமிழகத்தில் 208 அரசு பள்ளிகளை மூடி மக்களுக்கு பெரிய துரோகத்தை செய்துள்ளது தி.மு.க., ஆட்சி.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 லட்சத்து 66 ஆயிரம் வகுப்புகள் உள்ளது. அதில், 66 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 1 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.
தமிழகத்தில் 4 வயது பெண் குழந்தையில் இருந்து 80 வயது பாட்டி வரை பாதுகாப்பு கிடையாது. கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்பவர்களை போலீசார் பிடித்தால் உடனடியாக தி.மு.க., வினர் போன் செய்கின்றனர். காவல் துறையினர் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழல் இல்லை.
வரும் தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். நான் ஓட்டுக்கேட்க வரவில்லை. தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் வந்துள்ளேன்.
கடந்த 4 ஆண்டுகளாக இல்லாமல், தற்போது வாரம் ஒரு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கிறார். பண முதலாளிகள், சாராய ஆலை முதலாளிகள், கார்ப்பரேட் கம்பெனிகளுடன் தான் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.