/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் ஒரு தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரிக்கை
/
கள்ளக்குறிச்சியில் ஒரு தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சியில் ஒரு தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சியில் ஒரு தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரிக்கை
ADDED : ஜூலை 07, 2025 02:24 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு சட்டசபை தொகுதியை காங்., ஒதுக்க வேண்டும் என இளைஞர் காங்., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. இளைஞர் காங்., மாவட்ட தலைவர் தங்கத்தமிழகன் தலைமை தாங்கினார். இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் விஜயராஜன், மாநில செயலாளர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் விக்னேஸ்வரன் வரவேற்றார்.
காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார். முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா வாழ்த்துரை வழங்கினார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் இண்டியா கூட்டணி, தமிழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி வெற்றி பெற இளைஞர் காங்., நிர்வாகிகள் தீவிரமாக செயல்படுவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு சட்டசபை தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகர தலைவர் குமார், வட்டார தலைவர்கள் சரண்ராஜ், கிருபானந்தம், பிரபு, தொகுதி தலைவர்கள் கோடீஸ்வரன், கண்ணதாசன், செல்வராஜ், நிர்வாகிகள் ராஜ்குமார், கோவிந்தராஜ், காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.