/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க கோரிக்கை
/
பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க கோரிக்கை
ADDED : பிப் 18, 2024 12:27 AM

கள்ளக்குறிச்சி: பூசாரிகளுக்கு மாத ஊதியம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி பூசாரிகள் பேரமைப்பு மாவட்ட செயலாளர் தாயுமானவன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
கோவில்களில் போதிய பொருளாதார உதவி இல்லாததால், திருப்பணிகளை செய்வதற்கு பூசாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழக அரசு பூசாரிகளுக்கு மாத ஊதியம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் தர வேண்டும்.
நல வாரிய அட்டை பெற, வருவாய் சான்று கோருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். திருக்கோவில் திருப்பணிகளுக்கு தீப எண்ணெய் மற்றும் பூஜை பொருட்களுக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். கோவில்களுக்கு இலவச மின் வசதி ஏற்படுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.
மாநில அமைப்பு செயலாளர் ராமன், மாநில பொருளாளர் சிவராஜ், மாவட்ட இணை செயலாளர் கொங்குநாட்டான், ஒன்றிய தலைவர்கள் செந்தில், குமரவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.