/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு வணிக வளாகம் இடித்து அகற்றம்
/
பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு வணிக வளாகம் இடித்து அகற்றம்
பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு வணிக வளாகம் இடித்து அகற்றம்
பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு வணிக வளாகம் இடித்து அகற்றம்
ADDED : ஏப் 23, 2025 05:58 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காந்திரோட்டில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வணிக வளாக கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி பெரிய ஏரியில் இருந்து காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தது. சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி கடந்த 2024ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் கோவில் உட்பட பல்வேறு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
கட்டடங்களை இடிக்க தடை விதிக்கக்கோரி ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனால் காந்தி ரோட்டில் தரைத்தளம் உட்பட 3 தளங்களுடன் இருந்த வணிக வளாக கட்டடம் மட்டும் இடிக்கப்படவில்லை.
இந்நிலையில், தடை ஆணை உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையொட்டி கட்டடம் அகற்றப்பட உள்ளதாக நீர்வளத்துறை சார்பில் முன்கூட்டியே நோட்டீஸ் ஒட்டப்பட்டு, நேற்று முன்தினம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மோகன், ஆர்.டி.ஓ., லுார்துசாமி, நகராட்சி கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் வணிக வளாகம் இடிக்கும் பணி நேற்று நடந்தது.
டி.எஸ்.பி., தேவராஜ், தாசில்தார் பசுபதி, நகரமைப்பு ஆய்வாளர் அமலின் சுகுணா, நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

