/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தனியார் எதிர்ப்பு எதிரொலி கோவில் மண்டபம் இடிப்பு
/
தனியார் எதிர்ப்பு எதிரொலி கோவில் மண்டபம் இடிப்பு
ADDED : நவ 15, 2024 02:20 AM

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவின்போது சுவாமி சிலைகளை வைத்து அலங்காரம் செய்ய, அங்குள்ள இடத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில் 2019ல், மண்டபம் கட்டப்பட்டது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், 'கோவில் மண்டபம் கட்டப்பட்டுள்ள இடம் எனக்கு சொந்தமானது. அந்த இடத்தில் கோவில் திருவிழா தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதையடுத்து, மண்டபத்தை இடித்து அகற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி, உளுந்துார்பேட்டை தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன், பி.டி.ஓ., ராஜேந்திரன் முன்னிலையில், கொட்டும் மழையில் கோவில் மண்டபத்தை நேற்று இடித்து அகற்றினர்.