/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டாஸ்மாக் மூடக்கோரி ஆர்ப்பாட்டம்; பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு
/
டாஸ்மாக் மூடக்கோரி ஆர்ப்பாட்டம்; பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு
டாஸ்மாக் மூடக்கோரி ஆர்ப்பாட்டம்; பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு
டாஸ்மாக் மூடக்கோரி ஆர்ப்பாட்டம்; பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு
ADDED : ஜன 09, 2024 01:08 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம் நடந்த இருந்ததை அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் ஒத்தி வைக்கப்பட்டது.
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை, கனகனந்தல் சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதன் காரணமாக கனகனந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், டாஸ்மாக் கடை அருகே சமீப காலங்களில் இரண்டு கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
மேலும், அருகில் இருக்கும் நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி இன்று 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ம.க., சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் மாரியாப்பிள்ளை தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், பா.ம.க., மாவட்ட செயலாளர் ராஜ்குமார், அமைப்பு செயலாளர் செழியன், டாஸ்மாக் அலுவலர் சுந்தர்ராமன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 55 நாட்கள் கால அவகாசம் கேட்டனர். இதற்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதாக உறுதியளித்ததை அடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பா.ம.க.,வினர் அறிவித்தனர்.