/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 16, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநாவலூர் பி.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள், ஆப்பரேட்டர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் அப்பாதுரை முன்னிலை வகித்தார். மாநில பிரச்சார செயலாளர் அதிதேவி வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார்.
ஒன்றிய தலைவர் அமிர்தலிங்கம் நன்றி கூறினார்.