/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சென்னைக்கு பயணிகள் ரயில் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
/
சென்னைக்கு பயணிகள் ரயில் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 30, 2024 04:37 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் இருந்து சென்னை வரை சென்று வந்த பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கக்கோரி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலையிலிருந்து சென்னை வரை சென்று வந்த பயணிகள் ரயில் அகல பாதையாக மாற்றப்பட்ட பிறகு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் புதுச்சேரியில் இருந்து காட்பாடி வழியாக பெங்களூரு செல்லும் பயணிகள் ரயிலை தினமும் இயக்க வேண்டும். அரகண்டநல்லுார் ரயில்வே கேட்டில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் நேற்று அரகண்டநல்லுார் கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் பொன் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் வேல்மாறன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் உதயகுமார், மாவட்ட துணைத் தலைவர் விருத்தகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.