நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். வட்ட அமைப்பு செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். வட்ட தலைவர் முருகன், கோட்ட தலைவர் ஜெய்சங்கர், வட்ட செயல் தலைவர் ஆனந்தராமன் கோரிக்கை விளக்கவுரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் அடிப்படை பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தேர்வு பெற்ற 5000 கேங் மேன்களை பணியமர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கராபுரம் கோட்ட தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

