கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதை கைவிட்டு ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். நாடு முழுவதும் போதை பொருட்களை தடை செய்து, மாணவர்கள், இளைஞர்களை காத்திட பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் - உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு நிலம் வழங்கிய மக்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், மாநில பொது செயலாளர் சக்திவேல், மாநில பிரசார செயலாளர் கந்தநாதன், மாநில துணைத் தலைவர்கள் செங்கான், சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் காமராஜ் நன்றி கூறினார்.

