நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மொபைல் போனில் இ.கே.ஒய்.சி., - ஓ.டி.பி., - எப்.ஆர்.எஸ்., முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில், திருக்கோவிலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டாரத் தலைவர் ஜோதி தலைமை தாங்கினார். ஒன்றியத்துக்குட்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர்.

