தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 20, 2025 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 07:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஹரிகிருஷ்ணன், துணை தலைவர்கள் சக்கரவர்த்தி, பகத்சிங் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில தலைவர் செந்தில், அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் கண்டன உரையாற்றினர்.

சட்டசபை தேர்தலுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வினை நடத்தி காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், உளுந்துார்பேட்டையில் அமையும் காலணி தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வழங்க வேண்டும், கள்ளக்குறிச்சி பகுதியில் அரசு ஜவ்வரிசி ஆலை துவக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீபன்ராஜ், உறுப்பினர்கள் தங்கராசு, ரகு, ராஜிவ்காந்தி, ரங்கதுரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் அரவிந்தசாமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us