ADDED : ஏப் 02, 2026 05:43 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். 8 மணி நேர வேலை, சங்கம் சேரும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். விவசாய சங்க மாவட்ட தலைவர் கஜேந்திரன், வட்ட செயலாளர் அருள்தாஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
