/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துணை முதல்வர் பிறந்த நாள் இனிப்புகள் வழங்கல்
/
துணை முதல்வர் பிறந்த நாள் இனிப்புகள் வழங்கல்
ADDED : நவ 27, 2024 09:53 PM

ரிஷிவந்தியம்; சித்தப்பட்டினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ரிஷிவந்தியம் அடுத்த சித்தப்பட்டினம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைஞரணி துணை அமைப்பாளர் ராஜீவ்காந்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன் முன்னிலை வகித்தனர். துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, தி.மு.க., கட்சி கொடியேற்றப்பட்டு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கிளை செயலாளர் அசோகன், பிரதிநிதி அய்யனார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல், ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மணலுார்பேட்டையில் அன்னதானம் வழங்கப்பட்டது.