/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துணை முதல்வரின் ஆய்வு கூட்டம் அதிகாரிகளுக்கு கலெக்டர் 'அட்வைஸ்'
/
துணை முதல்வரின் ஆய்வு கூட்டம் அதிகாரிகளுக்கு கலெக்டர் 'அட்வைஸ்'
துணை முதல்வரின் ஆய்வு கூட்டம் அதிகாரிகளுக்கு கலெக்டர் 'அட்வைஸ்'
துணை முதல்வரின் ஆய்வு கூட்டம் அதிகாரிகளுக்கு கலெக்டர் 'அட்வைஸ்'
ADDED : அக் 18, 2024 06:59 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி நாளை(19ம் தேதி) வருகை தருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து நாளை(19ம் தேதி) மாலை 3 மணியளவில் துணை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.
இக்கூட்டத்தில் வருவாய் துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, வேளாண்மை துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுகா தார துறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கின்றார்.
கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முழுமையான அறிக்கையுடன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் துறை செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்து, கருத்துகளை தெரிவிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியாநாரயணன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.