/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேலை கிடைக்காத விரக்தி; எம்.இ., பட்டதாரி தற்கொலை
/
வேலை கிடைக்காத விரக்தி; எம்.இ., பட்டதாரி தற்கொலை
ADDED : டிச 13, 2024 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் எம்.இ., பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பானையங்கல் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் அருண்குமார், 27; எம்.இ., பட்டதாரி. வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
வேலை கிடைக்காத மன உளைச்சலில் இருந்த அருண்குமார், கடந்த 11ம் தேதி பூச்சி மருந்து குடித்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் காலை இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.