/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலை பகுதியில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு
/
கல்வராயன்மலை பகுதியில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு
ADDED : மார் 02, 2024 05:54 AM
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் 1,000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
கல்வராயன்மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. எஸ்.பி., சமய்சிங் மீனா உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், கொடமாத்தி மேற்கு ஓடை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவத்கு சாராய ஊறல்கள் போடப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து 5 பேரல்களில் இருந்து 1,000 லிட்டர் சாராய ஊறல்களை அங்கேயே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து ஊறல் வைத்திருந்த கள்ளச்சாராய வியாபாரியை தேடி வருகின்றனர்.

