/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு
/
கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு
ADDED : மார் 16, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
கல்வராயன்மலைப் பகுதியில் சிறப்பு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கீழ்கொட்டாய் மலை பகுதியில் உள்ள ஓடையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு 2 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் போடப்பட்டருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அங்கேயே கொட்டி அழித்தனர். தொடர்புடைய கள்ளச்சாராய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

