/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுற்றுலா மேம்பாட்டு வழிமுறை குறித்த வளர்ச்சி குழு கூட்டம்
/
சுற்றுலா மேம்பாட்டு வழிமுறை குறித்த வளர்ச்சி குழு கூட்டம்
சுற்றுலா மேம்பாட்டு வழிமுறை குறித்த வளர்ச்சி குழு கூட்டம்
சுற்றுலா மேம்பாட்டு வழிமுறை குறித்த வளர்ச்சி குழு கூட்டம்
ADDED : பிப் 08, 2025 08:41 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சுற்றுலாத் துறை சார்பில், மேம்பாட்டு வழிமுறைகள் குறித்த வளர்ச்சி குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் விழிப்புணர்வு, அடிப்படை வசதி மற்றும் முகவர்களுடன் இணைந்து பாரம்பரிய நடை பயணம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, சுற்றுலா மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்த திட்ட அறிக்கையை தயார் செய்து வழங்க உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.