/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வளர்ச்சி திட்ட பணிகள் : கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்ட பணிகள் : கலெக்டர் ஆய்வு
ADDED : மே 21, 2025 11:48 PM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில், 60 ஊராட்சிகள் உள்ளன. இங்கு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சாலை அமைத்தல், கழிவுநீர் வாய்க்கால் கட்டுதல், கலைஞர் கனவு இல்லம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கலெக்டர் பிரசாந்த் வாணாபுரத்தில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஒன்றியத்தில் மேற்கொள்ளபடும் வளர்ச்சி திட்ட பணிகளின் விபரம், நிலுவையில் உள்ள பணிகள், பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரம், அலுவலக பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தார்.
வீடு கட்டும் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கம்பி, சிமெண்ட் ஆகிய கட்டுமான பொருட்களின் விபரத்தை கேட்டறிந்து, பயனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்களை உடனடியாக வழங்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மேலப்பழங்கூர் நாற்றாங்கால் மையத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகை மரக்கன்றுகளை பார்வையிட்டார். ஆய்வின் போது, பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன், துணை பி.டி.ஓ., தினகர்பாபு, கணக்காளர் முத்துசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.