/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டையில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
உளுந்துார்பேட்டையில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
உளுந்துார்பேட்டையில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
உளுந்துார்பேட்டையில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 23, 2024 06:46 AM

ரிஷிவந்தியம் : உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
புத்தமங்கலம் ஊராட்சி யில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கட்டுமான பணிகள், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரேஷன் கடை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பரிந்தல் கிராமத்தில் 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செயல்பட்டு வரும் மரக்கன்றுகள் மற்றும் நாற்றுப்பண்ணை பணி, 49 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டட பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் கட்டுமான பணிகளுக்கு தரமான சிமென்ட், கம்பிகளை பயன்படுத்த உத்தரவிட்டார்.
மேலும், கிராம பகுதியில் பயன்பாடற்ற அரசு கட்டடங்களை பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இடித்து அகற்ற அறிவுறுத்தினார். ஆய்வின் போது பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ஜெயராமன் உடனிருந்தனர்.