தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு


UPDATED : நவ 06, 2026 07:08 PM

ADDED : நவ 05, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:08 PM ADDED : நவ 05, 2026 05:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பத்மஜா ஆய்வு செய்தார்.

வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின்கீழ் மாடாம்பூண்டி கிராமத்தில் 9.97 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை கட்டுமானப் பணி. திருப்பாலப்பந்தலில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தில் 19 லட்சம் ரூபாய் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து முடியனுார் கிராமத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலைய கட்டடத்தை ஆய்வு செய்தார். கீழத்தாழனுார் ரேஷன் கடையில், ரேஷன் பொருட்களின் தரம், இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின், ஜி.அரியூர் அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, நுாலம், குடிநீர், கழிவறை வசதி ஆகியவற்றை பார்வையிட்டு கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி



கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் விளம்பார் ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து துருகம் சாலைில் உள்ள நுண் உர மையத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், இயற்கை உரம் தயாரிப்பு, மக்காத திட்டக்கழிவுகளை தரம் பிரிக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

சிறுவத்துார் கிராமத்தில் புதிதாக மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டார். கள்ளக்குறிச்சியில் 1.53 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

திட்டப்பணிகள் அனைத்தையும், தரமாகவும், விரைவாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us