sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சித்தலுார் கோவிலில் அடிப்படை வசதி பக்தர்கள் கோரிக்கை

 சித்தலுார் கோவிலில் அடிப்படை வசதி பக்தர்கள் கோரிக்கை

 சித்தலுார் கோவிலில் அடிப்படை வசதி பக்தர்கள் கோரிக்கை


ADDED : பிப் 12, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தியாகதுருகம் அடுத்த சித்தலுாரில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. பெரியநாயகி அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலதெய்வாக வழிபடுவதால், தமிழகம் மட்டும் இன்றி வெளமாநில, வெளிநாட்டில் வாழும் பக்தர்களும் இக்கோவிலுக்கு வருகின்றனர். மாசி மாத திருவிழா, ஆடி, தை மாதங்களில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்வர். மாதம் தோறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவமும் விமர்சையாக நடந்து வருகிறது.

ஆண்டு தோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போதிய அடிப்படை வசதி இன்றி தவித்து வருகின்றனர். கோயில் வளாகத்தில் கழிவறை, குடிநீர் வசதி இல்லை. இதனால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் இந்தாண்டு மாசி திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தொடர்ந்து சாமி திருவீதியுலா மற்றும் 23ம் தேதி மயான கொள்ளை திருவிழா, 24 ம் தேதி தேரோட்டம் நடக்க உள்ளது. விழாவையொட்டி, தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருவார்.

விழாவை தொடர்ந்து காண்பதற்காக, இரவில் அங்கேயே தங்கி விடுவதும் வழக்கம். இவர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லாததால், பெண்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். அருகில் உள்ள மணிமுக்தா ஆற்றை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மேல்நிலை தண்ணீர் தொட்டி, கழிவறை மற்றும் குளியல் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us