/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் ரூ.4.20 கோடியில் தார்சாலை
/
கல்வராயன்மலையில் ரூ.4.20 கோடியில் தார்சாலை
ADDED : பிப் 07, 2024 04:15 AM

கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் 4.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை போடும் பணி துவங்கியது.
கல்வராயன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட சேத்துார், உப்பூர், வாரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். அப்பகுதி மக்கள் சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து 4 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் உப்பூர் - வாரம் கிராமங்கள் இடையே 6 கி.மீ., துாரம் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
தொடர்ந்து புதிய தார் சாலை அமைக்கும் பணியினை உதயசூரியன் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சந்திரன், செயலாளர்கள் சின்னத்தம்பி, கிருஷ்ணன், ஊராட்சி தலைவர்கள் ஆண்டி, சீனிவாசன், ரத்தினம், அர்ச்சனா லட்சுமணன், பி.டி.ஓ., அண்ணாதுரை, உதவி பொறியாளர் அருண்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

