ADDED : ஜன 22, 2024 12:41 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிக்டோ ஜாக்) ஆயத்த கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். பல்வேறு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், கலாநிதி, செல்வராசு, மனோகரன், எழிலரசன், மாவட்ட பொருளாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் லட்சுமிபதி, துணைத்தலைவர் ரஹீம், அகில இந்திய பொது குழு உறுப்பினர் ராமதாஸ் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், அரசாணை எண் 243ஐ உடனடியாக ரத்து செய்தல் உட்பட 12 தீர்மானங்களை வலியுறுத்தி வரும் 27ம் தேதி கள்ளக்குறிச்சியில் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் லாரன்ஸ் நன்றி கூறினார்.