ADDED : நவ 11, 2024 05:30 AM

அ நிறம் | அளவு
சங்கராபுரம் : சங்கராபுரம் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி., திஷா மித்தல் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பதிவேடுகளை பார்வையிட்டு, குற்ற வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். நகரில் விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து போலீசாரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் உடனிருந்தனர்.
