ADDED : ஆக 29, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடமாமந்துாரில் பொதுமக்களுக்கு பயன்பாடின்றி சுகாதார வளாகம் பாழாகி வருகிறது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடமாமந்துாரில் கடந்த 2021-22ம் ஆண்டு 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
தற்போது இந்த சுகாதார வளாகத்தைச் சுற்றிலும் புதர்கள் மண்டி பொதுமக்கள் பயன்பாடின்றி மாட்டுத் தொழுவமாக மாறி வருகிறது.
சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.