/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர்- -- பட்டம்' இதழ் வினாடி- வினா போட்டி

ADDED : நவ 07, 2025 12:32 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழின் வினாடி வினா போட்டியில் வெற்றியாளர்களுக்கு கேடயம், பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழின் வினாடி வினா போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதில் அதில் முன்னணி மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த வினாடி வினா போட்டிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் அசோக்குமார், கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். பட்டம் இதழின் பொறுப்பாசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
8 குழுக்களாக பிரிக்கப்பட்ட மாணவர்களுக்கு இரண்டு சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவர்கள் தேஜேஷ்வர், ஜெய்கிருஷ்ணன் அணியினர் முதலிடம் பிடித்தனர். 10-ம் வகுப்பு மாணவர்கள் கனகவேல், செல்வராகன் அணியினர் இரண்டாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் 'தினமலர்- பட்டம்' இதழை பள்ளிக்கு இலவசமாக வழங்கும் பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் சான்றிதழ், கேடயம், பதக்கம் வழங்கி பாராட்டினர். வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற இரு அணி மாணவர்கள் புதுச்சேரியில் நடக்கும் இறுதி போட்டியில் பங்கேற்பார்கள்.