/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், விருத்தாசலத்தில் 'தினமலர் - நீட்' மாதிரி தேர்வு இன்று நடக்கிறது
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், விருத்தாசலத்தில் 'தினமலர் - நீட்' மாதிரி தேர்வு இன்று நடக்கிறது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், விருத்தாசலத்தில் 'தினமலர் - நீட்' மாதிரி தேர்வு இன்று நடக்கிறது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், விருத்தாசலத்தில் 'தினமலர் - நீட்' மாதிரி தேர்வு இன்று நடக்கிறது
ADDED : ஏப் 27, 2025 07:17 AM

விழுப்புரம் : 'தினமலர்' நாளிதழ் சார்பில் இன்று 27ம் தேதி விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, விருத்தாசலத்தில் நீட் மாதிரி தேர்வு நடக்கிறது.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' தேர்வு, வரும் மே 4ம் தேதி இந்தியா முழுதும் நடக்கிறது.
அதையொட்டி, 'தினமலர்' நாளிதழ் சார்பில் நீட் மாதிரி தேர்வு, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, விருத்தாசலத்தில் இன்று 27ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
விழுப்புரம்
'தினமலர்' நாளிதழ் மற்றும் சரஸ்வதி சென்ட்ரல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியோடு இணைந்து விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை வி.பாளையத்தில் உள்ள அப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
சிறப்பு பஸ் வசதி
இப்பள்ளி தேர்வு மையத்திற்கு, விழுப்புரம் கோர்ட் வளாகம் எதிரில் மற்றும் நான்குமுனை சிக்னலில் இருந்து பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
கடலுார்
'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து கடலுார் நெல்லிக்குப்பம் சாலை, மெயின் ரோடு கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
விருத்தாசலம்
'தினமலர்' நாளிதழ், ஜெயப்பிரியா வித்யாலயா இணைந்து, விருத்தாசலத்தில், சேலம் புறவழிச்சாலையில் பூந்தோட்டம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி
'தினமலர்' நாளிதழ், ஏ.கே.டி., ஐ.ஐ.டி., நீட் அகாடமி இணைந்து, கள்ளக்குறிச்சி நீலாமங்கலம் ஏ.கே.டி., மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடக்கிறது.
தேர்வு அறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள்:
l எழுதப்பட்ட, அச்சடிக்கப்பட்ட தாள்கள், குறிப்புகள், ஜியோமென்ட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், ரைட்டிங் பேடு, பென் டிரைவ், எரேசர், லாக் டேபிள், எலக்ட்ரானிக்ஸ் பென், ஸ்கேனர் அனுமதி இல்லை.
l மொபைல் போன், புளூடூத், இயர்போன்ஸ், மைக்ரோபோன், கேமரா, பைக்ரோ சிப், பேஜர், ஹெல்த் பேண்டு உள்ளிட்ட தொலை தொடர்பு கருவிகளுக்கு அனுமதி இல்லை.
l வாலட், காகல்ஸ், ஹாண்ட்பேக்ஸ், பெல்ட், கேப் அனுமதி இல்லை.
l வாட்ச், ரிஸ்ட் வாட்ச், பிரேஸ்லெட், கேமராவுக்கும் அனுமதி இல்லை.
l காதணி, வளையல், மூக்குத்தி உள்பட எந்த வகையான ஆபரணங்கள் அணிந்துவரவோ, மெட்டாலிக் பொருட்களும் கொண்டுவரவோ கூடாது.
l காபி, டீ, ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்ஸ், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட எந்த வகையான உணவு பொருட்களையும் திறந்த நிலையிலோ அல்லது மூடியோ கொண்டுவரக் கூடாது.
l தேர்வறையில் தேர்வர்கள் கொண்டு வரும் பொருட்களை வைக்க எந்த வசதியும் செய்யப்படாது. எனவே பால் பயிண்ட் பேனாவை தவிர வேறு ஏதும் கொண்டு வர வேண்டாம்.
l தேர்வர்கள் மதம், கலாசார ரீதியாக பொருட்களை அணிந்து இருந்தால் 2 மணி நேரத்திற்கு முன்பாக தகவல்களை தேர்வறையில் தெரிவிக்க வேண்டும்.
உடை கட்டுப்பாடுகள்
l மென்மையான நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும். மாணவர்கள் அரைக்கை சட்டை அணிய அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அல்லது ஹெவி குளோத் அணிந்து வரக்கூடாது.
பாரம்பரிய, கலாசார உடை அணிந்து வந்தால் அது தொடர்பாக தேர்வு அறைக்கு வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும்.
l தேர்வறையில் செருப்பு, சேன்டல்ஸ், லோ ஹீல்ஸ் அணிந்து வரலாம்.
l தேர்வறைக்கு ஷூ அணிந்து வர அனுமதி இல்லை.

