/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஆக 25, 2025 10:48 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தினமலர் சார்பில் கல்வி சேவைக்காக மாணவர்களுக்கான பட்டம் இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியாகிறது. இந்த சிறப்பிதழ், மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் விரிவான தகவல்கள் இடம்பெற்று வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டியும் நடத்தி ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் கலாபன், பள்ளி ஆசிரியர்கள் பங்களிப்புடன் தினமும் 50 தினமலர் பட்டம் இதழ் மாணவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தனர். அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் அசோக்குமார், கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். பொறுப்பாசிரியர்கள் பாலசுப்ரமணியம், சதீஷ்குமார் ஆகியோர் தினமலர் பட்டம் இதழை தினமும் படித்து, பொது அறிவு விபரங்களை தெரிந்து கொண்டு மேன்மை பெற வேண்டும் என அறிவுறுத்தினர். ஆசிரியர்கள் ராமு, சிவாஜி ஆகியோர் உடனிருந்தனர்.