/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி விவேக் அகாடமியில் 'தினமலர்- பட்டம்' வினாடி வினா
/
கள்ளக்குறிச்சி விவேக் அகாடமியில் 'தினமலர்- பட்டம்' வினாடி வினா
கள்ளக்குறிச்சி விவேக் அகாடமியில் 'தினமலர்- பட்டம்' வினாடி வினா
கள்ளக்குறிச்சி விவேக் அகாடமியில் 'தினமலர்- பட்டம்' வினாடி வினா
ADDED : ஜன 26, 2025 05:45 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விவேக் அகாடமி மாணவர்களுக்கு 'தினமலர்- பட்டம்' இதழின் 'பதில் சொல் பரிசு வெல்' வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி ராஜா நகரில் இயங்கி வரும் விவேக் அகாடமி டியூஷன் சென்டரில் பயிலும் மாணவர்களுக்கு நிறுவனம் சார்பில் தினமலர் நாளிதழின் அறிவியல் களஞ்சியமான பட்டம் இதழ் வழங்கப்பட்டு வருகிறது. ஒழுக்கத்துடனான கல்வியே வெற்றியை தரும் எனும் நோக்கில் நடத்தப்படும் விவேக் அகாடமியில் மாணவர்களிடையே வாசிப்பு திறனை அதிகரிக்கவும், பொது அறிவை வளர்க்கும் வகையிலும் பொறுப்பு ஆசிரியர்கள் மூலமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்த அகாடமியில் புதுச்சேரி 'தினமலர்- பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து 'பதில் சொல் பரிசு வெல்' வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
இதில் 16 மாணவர்கள் கலந்து கொண்டனர். 8 குழுக்களாக பிரித்து இரண்டு சுற்றுகளாக போட்டிகள் நடந்தது. இதில் 9ம் வகுப்பு மாணவிகள் பிரீத்தி, மதுமிதா முதலிடமும், மாணவர்கள் அஸ்கர் அகமது, குணா 2ம் இடமும் பிடித்தனர்.
அகாடமி நிறுவன முதல்வர் விவேக் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம், பதக்கம் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் துணை முதல்வர் ரமேஷ், பொறுப்பு ஆசிரியர்கள் கமல்ராஜ், ஷைனாஸ் பேகம், வசந்த் கலந்து கொண்டனர்.