/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'தினமலர்' நீட் மாதிரி தேர்வு மாணவர் தினேஷ் முதலிடம்
/
'தினமலர்' நீட் மாதிரி தேர்வு மாணவர் தினேஷ் முதலிடம்
'தினமலர்' நீட் மாதிரி தேர்வு மாணவர் தினேஷ் முதலிடம்
'தினமலர்' நீட் மாதிரி தேர்வு மாணவர் தினேஷ் முதலிடம்
ADDED : ஏப் 28, 2025 05:07 AM
கள்ளக்குறிச்சி : 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஏ.கே.டி., - ஐ.ஐ.டி., நீட் அகாடமி இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வில் மாணவர் தினேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
'தினமலர்' நாளிதழ் ஏ.கே.டி., - ஐ.ஐ.டி., நீட் அகாடமி இணைந்து நேற்று நடத்திய நீட் மாதிரி தேர்வினை ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர். ஓ.எம்.ஆர்., ஷீட்டில், விடையை வட்டமிட்டனர். தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாலை 5:00 மணியளவில் முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில், மாணவர் தினேஷ் 720 மதிப்பெண்ணுக்கு 604 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இவர் இயற்பியலில் 137, வேதியியிலில் 137, தாவரவியலில் 170, விலங்கியலில் 160 மதிப்பெண் எடுத்துள்ளார்.
தொடர்ந்து மாணவர் அப்துல் ரசீன் 556 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம், மாணவர் அஷ்வத் 504 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம், மாணவர் விக்னேஷ் 479 மதிப்பெண்ணுடன் நான்காம் இடம், மாணவி தர்ஷணா 474 மதிப்பெண்ணுடன் ஐந்தாம் இடம் பிடித்து அசத்தினர்.