/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ்; ராஜூ மருத்துவமனை சார்பில் வழங்கல்

ADDED : செப் 05, 2025 07:45 AM

கள்ளக்குறிச்சி; ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கள்ளக்கு றிச்சி ராஜூ இருதயம்-தோல் மருத்துவமனை சார்பில், 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி, சுந்தரவிநாயகர் கோவில் தெரு ராஜூ இருதயம்-தோல் மருத்துவமனை சார்பில், ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 'தினமலர்--பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், ராஜூ மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பாபு சக்கரவர்த்தி, தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் இந்துபாலா ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு பட்டம் மாணவர் பதிப்பினை வழங்கி பேசியதாவது; பெண் பிள்ளைகள் தங்களின் தகுதிகளை வளர்த்துக்கொண்டு, தனது சொந்தக்காலில் நிற்க வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். மாணவர்கள் அனைவரும் மது மற்றும் போதை, பழக்கத்திற்கு ஆளாக மாட்டோம் என சத்தியம் ஏற்கவேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும். கல்வி அறிவுடன் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள 'பட்டம்' இதழினை தினமும் படிக்க வேண்டும் என டாக்டர் இந்துபாலா கூறினார்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் பாலுசாமி, உதவி தலைமை ஆசிரியர் பொன்னுசாமி, பள்ளி பட்டம் இதழ் பொறுப்பு ஆசிரியைகள் கமலா, தனலட்சுமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை கலையரசி நன்றி கூறினார்.