/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சியில் தினமலரின் பங்களிப்பு
/
கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சியில் தினமலரின் பங்களிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சியில் தினமலரின் பங்களிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சியில் தினமலரின் பங்களிப்பு
ADDED : செப் 06, 2025 07:34 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை, தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதில் தினமலர் முக்கிய பங்கு வகித்தது.
அதனால், தமிழகத்தின் 33வது மாவட்டமாக, விழுப்புரத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 26.11.2019 அன்று, கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில், அப்போதைய முதல்வர் பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை துவக்கி வைத்தார்.
புதிதாக பிறந்த தவிழ்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், மாவட்ட மக்களின் தேவைகள், பொது பிரச்னைகளை தினமலரில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு சுட்டிகாட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மக்களின் கோரிக்கைகள், பிரச்னைகள் படிப்படியாக நிறைவேற்றுப்பட்டது.
இருவழிச்சாலை இருந்த உளுந்துார்பேட்டை - சேலம் தேசிய நெடுச்சாலையில் தொடர்ச்சியாக விபத்து ஏற்படுவது குறித்து செய்தி வெளியானதால், 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. பஸ் நிலைய நெருக்கடி குறித்த தொடர் செய்திகளால், கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா அருகே புதிய புறநகர் பஸ் நிலைய பணிகள் நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் இடம், வீரசோழபுரம் சிவன் கோவிலுக்கு சொந்தமானது. பாழடைந்த அக்கோவிலை புனரமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டதால், கோவில் புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி நகர சாலை விரிவாக்கம், மாற்றுப்பாதை அமைப்பு, அரசு கல்லுாரிக்கு சொந்த கட்டடம் பணிகள் நடந்து வருகிறது. மணிமுக்தா அணையில் கூடுதல் ஷட்டர்கள் அமைத்து, அணை கரைகள் அகலப்படுத்தப்பட்டது.
தொடர் செய்திகளால் சோமண்டார்குடி தடுப்பணை சீரமைப்பு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. பொற்படக்குறிச்சியோடு நிறுத்தப்பட இருந்த சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரயில் பாதை திட்ட பணிகள் கள்ளக்குறிச்சி வரை நீட்டிக்கப்பட உள்ளது.
ரிஷிவந்தியம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகப்பெரிய பரப்பளவு, அதிக வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கிய சங்கராபுரம் தாலுகாவை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, வாணாபுரத்தை தலைமையிலடமாக கொண்டு புதிய தாலுகா உருவானது. ரிஷிந்தியம் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி அமைக்கப்பட்டது. ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலை புனரமைக்கவும், மூலவருக்கு தைல காப்பு நடத்த வேண்டும் என செய்தி வெளியிடப்பட்டதையடுத்து தற்போது பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. உளுந்துார்பட்டையில் கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது. நரிகுறவர் குடியிருப்பில், புதிய வீடுகள் கட்டப்பட்டது.
தியாகதுருகம் மேல்பூண்டி தக்கா ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம், தியாகதுருகம் மலையை சுற்றி பாதுகாப்பு வேலி, மலையம்மன் கோவில் பாதை சீரமைக்க நிதி ஒதுக்கீடு, புதிதாக பி.டி.ஓ., அலுவலகம் கட்டும் பணியும், தியாகதுருகம் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தியாகதுருகம் - திருவண்ணாமலை சாலை விரிவாக்கம், தியாகதுருகம் - அசகளத்துார் சாலையில் கோமுகி நதி, மயூரா நதியின் குறுக்கே மேம்பாலம், கண்டாச்சிமங்கலம் அருகே மணிமுக்தா ஆற்றில் தடுப்பணை, புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம், மார்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் வைக்கும் குடோன், புதிய பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்டவை தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டதன் மூலம் கொண்டு வரப்பட்டது.
சங்கராபுரம் சங்கராபுரம் தொடர்பாக வெளியான தொடர் செய்திகளால், அரசம்பட்டு - பாலப்பட்டு சாலை சீரமைப்பு, ரூ. 9 கோடியில் புதிய நீதிமன்ற கட்டடம், மின்தடை பிரச்னையை தீர்க்க ரூ.10 கோடி மதிப்பில் புதிய மின்மாற்றி, வடபாலப்பட்டு மணி ஆற்றில் ரூ.7 கோடி மதிப்பில், புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
ஒரு வழி பாதையாக இருந்த சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி சாலை, 4 வழி சாலையாக மாற்றப்பட்டது.
பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு போக்குவரத்து கழக பணிமனை கொண்டுவரப்பட்டது.