UPDATED : நவ 19, 2026 07:18 PM
ADDED : நவ 19, 2026 07:16 PM

அ நிறம் | அளவு
சின்னசேலம்: சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறை கேட்பு முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., முருகன் தலைமை தாங்கினார். சின்னசேலம் தாசில்தார் கனகபூரணி, தனி தாசில்தார்கள் அருள்மொழி, அனந்தகிருஷ்ணன், வாசுதேவன், சிவசங்கர் முன்னிலை முன்னிலை வைத்தனர்.
மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் அந்தோணி ராஜ் வரவேற்றார். முகாமில் நுாற்றுக்கு மேலான மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர். தொடர்ந்து நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
சின்னசேலம் கால்நடை மருத்துவர் பிரபாகரன், வடக்கனந்தல் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன், சின்னசேலம் செயலாள் சங்கர், சின்னசேலம் ஆர்.ஐ., கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ.,க்கள் தமிழரசி, விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
