ADDED : டிச 16, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கம் சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியையொட்டி, கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து மாற்றுத் திறனாளிகளின் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் ஊர்வலத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முக்கிய சாலை வழியாக சென்ற ஊர்வலம், கண்ணன் மகாலில் முடிந்தது. அங்கு, நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்பட்டது.