/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்து கழகங்களில் காலியிடம்; புதிய விதிமுறையால் ஏமாற்றம்
/
போக்குவரத்து கழகங்களில் காலியிடம்; புதிய விதிமுறையால் ஏமாற்றம்
போக்குவரத்து கழகங்களில் காலியிடம்; புதிய விதிமுறையால் ஏமாற்றம்
போக்குவரத்து கழகங்களில் காலியிடம்; புதிய விதிமுறையால் ஏமாற்றம்
ADDED : ஏப் 15, 2025 06:38 AM
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 25 மண்டலங்களில் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது.
உடன், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருந்த நபர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க சென்றனர். இதுவரை தனியார் பஸ்களில் டிரைவராக பணிபுரிபவர்கள் அதற்கான லைசென்ஸ்சும், கண்டெக்டராக பணிபுரிபவர்கள் அதற்கான லைசென்சும் வைத்திருப்பர். அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலைக்காக அந்தந்த பணிக்கு தனி, தனியாக விண்ணப்பிப்பது வழக்கம்.
ஆனால், தற்போது புதிய விதிமுறையை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, டிரைவர், கண்டெக்டர் பணிக்கு தனி, தனியாக விண்ணப்பிக்க முடியாது. இரண்டு 'லைசென்ஸ்'களும் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இது குறித்து முன்கூட்டியே தெரிவிக்காமல், திடீரென மாற்றம் செய்யப்பட்டதால் பல ஆண்டுகளாக அரசு வேலைக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். போக்குவரத்துக் கழகங்களில் ஆயிரக்கணக்கில் காலி பணியிடம் உள்ள நிலையில், தற்போது சொற்ப அளவிலான பணியிடத்திற்கு மட்டுமே அறிவிப்பு வெளியாகியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு லைசென்ஸ்கள் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதிமுறையில் தளர்வு வழங்கி, பழைய நடைமுறைப்படி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.