/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி
/
அரசு பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி
ADDED : ஜூலை 29, 2025 08:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நேற்று நடந்தது. தாசில்தார் விஜயன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன், தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் முன்னிலை வகித்தனர்.
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு தங்களை தற்காத்து கொள்வது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது. இதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.