/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு பயிற்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு பயிற்சி
ADDED : ஆக 06, 2025 12:48 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கு, பேரிடர் கால மீட்பு பயிற்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர், பள்ளிகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு பேரிடர் மீட்பு குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து வரு கின்றனர். அதன் தொடர்ச்சியாக, கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பேரிடர் கால மீட்பு நடவடிக்கை குறித்த பயிற்சி நேற்று நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான வீரர்கள், மூச்சுத் திணறல், மாரடைப்பு உள்ளிட்ட அவசர காலங்களில் அளிக்க வேண்டிய முதலுதவி, சாலை மற்றும் தீ விபத்துகளின் போது அளிக்க வேண்டிய முதலுதவி, நாய் கடி, விஷக் கடி போன்ற நிகழ்வுகளில் செய்ய வேண்டியது, செய்ய கூடாதவை குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை காப்பாற்றும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.