/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கொள்ளிடம் கீழணையில் இருந்து 5,500 கனஅடி நீர் வெளியேற்றம்
/
கொள்ளிடம் கீழணையில் இருந்து 5,500 கனஅடி நீர் வெளியேற்றம்
கொள்ளிடம் கீழணையில் இருந்து 5,500 கனஅடி நீர் வெளியேற்றம்
கொள்ளிடம் கீழணையில் இருந்து 5,500 கனஅடி நீர் வெளியேற்றம்
ADDED : அக் 17, 2024 12:25 AM
காட்டுமன்னார்கோவில் : டெல்டா பகுதியில் பெய்த கன மழையால், கீழணை பாதுகாப்பு கருதி, கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் 5,500 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.
டெல்டா பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் தஞ்சை மாவட்டம் கீழணைக்கு 6,300 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் நீர் மட்டம் 141.69 மில்லியன் கன அடி அடியாக உள்ளது.
கீழணையில் இருந்து வடவாற்றில் 306 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்காலில் 352 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்காலில் 351 கன அடி வீதம் பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.
கீழணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளதால் அணை பாதுகாப்பு கருதி உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் 1,500 கன அடி திறந்து விடப்பட்டது. நேற்று காலை முதல் 5,500 கன அடி அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.