/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
/
சங்கராபுரத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
ADDED : நவ 28, 2024 05:35 AM

சங்கராபுரம்; சங்கராபுரம் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி துவங்கியது.
சங்கராபுரம் பேரூராட்சி சார்பில் குடிநீர் கட்டணம் செலுத்த பலமுறை எடுத்துக்கூறியும் பலர் குடிநீர் கட்டடணம் செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து கட்டாதவர்களின் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்திருந்தனர். இருந்தும் குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டுள்ளனர்.
இதில் இதுவரை 15 வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் சங்கரன் தெரிவித்தார்.