/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கரியாலுாரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
/
கரியாலுாரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
ADDED : அக் 27, 2024 05:08 AM

கள்ளக்குறிச்சி : கரியாலுாரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலக இணை பதிவாளர் (சட்டம் மற்றும் பயிற்சி) சாமூண்டீஸ்வரி, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கம் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி பயனுள்ள வகையில் திட்டங்கள் உள்ளதா, வேறு ஏதேனும் தேவை இருக்கிறதா என்பது குறித்து மலைவாழ் மக்களிடம் கேட்டறியப்பட்டது.
கள்ளக்குறிச்சி சரக துணைப்பதிவாளர் சுகுந்தலதா, கல்வராயன்மலை திட்ட அலுவலர் சுந்தரம், தனி தாசில்தார் சத்தியநாராயணன், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் (கடன் திட்டம்) சுந்தரேச கணபதி, வெள்ளிமலை கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியர் சக்திவேல், செயலாளர்கள் ராமர், குப்புசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.