/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடை உரிமையாளர்களிடையே தகராறு: 2 பேர் மீது வழக்கு
/
கடை உரிமையாளர்களிடையே தகராறு: 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 12, 2025 10:09 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தகராறில் இரு கடைகளின் உரிமையாளர்கள் மீது மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே உள்ள எலக்ட்ரீக்கல் கடையின் உரிமையாளர் மூசா,53; இவரிடம் நீலமங்கலம் சேர்ந்த கம்ப்யூட்டர் கடை வைத்திருக்கும் முகமதுயாசீன்,45; என்பவர் கடந்த 3 மாதத்திற்கு யூபிஎஸ்., பேட்டரி வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை முகமதுயாசீன் சிறுக சிறுக கொடுத்து வந்ததால், பேட்டரிக்கான வாரண்டி கார்டை கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் முகமதுயாசீன் பேட்டரியில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், அதனை சீரமைத்து தருமாறு மூசாவிடம் வாரண்டி கார்டினை கேட்டு வந்துள்ளார்.
கடந்த 2 ம் தேதி மாலை 4.30 மணிக்கு முகமதுயாசீனுக்கும், கடையின் உரிமையாளர் மூசாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் முகமதுயாசீன், மூசா ஆகியோர் மீது தனி தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.